வாணியம்பாடியில் படுகொலை வழக்கில் 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடி கொலைவழக்கில் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்த குற்றவாளிகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தஞ்சாவூர் jm 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பு வழக்கறிஞர் வீரசேகர் உடன் சென்று 6 பேர் சரணடைந்துள்ளனர்.
அதில் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த அகஸ்டின், ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், அஜய், ஊரப்பாக்கம் வண்டலூர், சத்தியசீலன் மண்ணிவாக்கம், முனீஸ்வரன் ஓட்டேரி வண்டலூர், செல்வகுமார் ஆகிய 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இதில் செல்வா என்கின்ற செல்வகுமார் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் பிடிபட்ட கஞ்சா வழக்கில் இவர் பெயர் உள்ளது.
அப்போதிலிருந்து தலைமறைவாக இருந்துள்ளார் இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த் என்கிற ரவி மற்றும் டில்லி குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஸ் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu