5 நாட்களில் ஒரே கிராமத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

5 நாட்களில் ஒரே கிராமத்தில் கொரோனாவுக்கு  5 பேர் பலி
X
வாணியம்பாடி அருகே கடந்த 5 நாட்களில் ஒரே கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் 5 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தி கிராமத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 5 பேர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கிராமம் முழுவதும் வசித்து வரும் மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் கிராமத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் கிராமம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது எனவும் கிராமத்திலிருந்து வெளியில் யாரும் செல்லக்கூடாது என அறிவித்துள்ளனர்.

இந்த மருத்துவ முகாமிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பரிசோதனை செய்ய முன்வராததால் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!