வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ரேஷன் அரிசி கடத்த பயன்பட்ட வேன்

வாணியம்பாடியில பழுதாகி நின்ற வாகனத்தை பரிசோதனை செய்தபோது வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேசன் அரிசி சிக்கியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தர்கா பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்று போலீசார் இருப்பது கண்டு வேகமாக சென்றுள்ளது.

அப்போது சிறிது தூரம் சென்ற மினி வேன் சக்கரம் கழன்று பழுதாகி நின்றதால், சாலையின் நடுவே அதனை அவசர அவசரமாக சரி செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் விசாரித்தபோது வாகனத்தில் 50 மூட்டைகளில் இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது

இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அரிசியை கடத்தி வந்த மேல் நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் குமார் என்பவரை கைது செய்து 2.5 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!