வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் அதிரடி நடவடிக்கை

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் மோகன் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறுசிறு மூட்டைகளாக கட்டி ரயில் கடத்துவதாக வாணியம்பாடி வட்டாட்சியர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர் அப்பொழுது சிறுசிறு மூட்டைகளாக கட்டி அருகில் இருந்த புதரில் பதிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்ட அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 51 மூட்டையில் இருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பின்னர் வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!