வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல்
X

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர், பெருமாள்பேட்டை, நியூடவுன், பெரிய பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலங்காயம் அடுத்த வெப்பலம்பட்டி பகுதியில் இருந்து பெருமாள்பேட்டை வழியாக வாணியம்பாடி வந்த மளிகை கடை உரிமையாளர் சதீஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த 65 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் புதூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையின் போது பெரியபேட்டை பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story