தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு
X

வாணியம்பாடியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்

வாணியம்பாடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் மீது வழக்கு பதிவு 20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காவல்துறை உட்கோட்டம் பகுதிகளில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆகியவை அதிக அளவில் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு தகவல் கிடைத்தது அதனடிப்படையில் இன்று வாணியம்பாடி நகரம், அம்பலூர், திம்மாம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாசம் ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாணியம்பாடி சி.எல். சாலை, கச்சேரி சாலை, அம்பலூர், தும்பேரி, திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதை கண்டறியப்பட்டு சுமார் ரூபாய் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் ஜெகன், கதிரவன், கரீம், முஸ்தாக் அகமது உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!