118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு நினைவு அஞ்சலி
பாலாற்று வெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவு தூணுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கச்சேரி சாலையில் உள்ள பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவாக நினைவுத்தூண் வைக்கப்பட்டுள்ளது.
1903ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் இதே நாள் 12-11-1903 அன்று ஏற்பட்ட பாலாற்று பெருவெள்ளத்தில் சிக்கி வாணியம்பாடி நகரத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் உயிரிழந்தனர். 118வது நினைவு தினத்தை முன்னிட்டு பாலாறு பாதுகாப்பு சங்கதலைவர் வெங்கடேசன் தலைமையில் இறந்த 200 பேரின் நினைவு தூணுக்கு மலர் மாலைகள் வைத்து மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் திரளானோர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் மீண்டும் பாலாற்றில் பெருவெள்ளம் வருவதை தடுக்க மக்கள் யாரும் பாலாற்றை ஆக்கிரமிப்பை செய்ய கூடாது கழிவுகளை கலக்க கூடாது நதியை தெய்வம் போல் கருத வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அஞ்சலி செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது அம்பலூர் அசோகன் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu