வாணியம்பாடி அருகே ஏரியை தூர் வாராததால் மீன்வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

வாணியம்பாடி அருகே ஏரியை தூர் வராததால் மீன்வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

வாணியம்பாடி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏரியை தூர் வாராததால் மீன்பிடி ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 530 ஏக்கர் நிலப் பரப்பளவு கொண்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஏரி உள்ளது இந்த ஏரி தண்ணீர் மூலம் நாராயணபுரம், ஜவ்வாது ராமச்சந்திராபுரம், அலசந்திராபுரம் , திம்மாம்பேட்டை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. ஏரி மற்றும் கால்வாய்களை தூர்வாறி நீர்நிலைகளை பாதுகாக்கவும், கரையை பலப்படுத்த வேண்டும் எனவும் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஏரியில் மீன் வளர்த்து பிடித்து விற்பனை செய்ய ஏலம் விடுவதற்காக வந்திருந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் விடுவதற்கான பணிகளில் ஈடுபட்ட போது கிராம மக்கள் அதை தடுத்து நிறுத்தினர். அப்போது கிராம மக்களிடம் திமுகவை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏரி மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர் இதன் பின்னர் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். பின் கண்மாய்க்கான மீன்பிடி ஏலம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

Next Story
ai solutions for small business