வாணியம்பாடியில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

வாணியம்பாடியில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!
X

வாணியம்பாடியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாரதியை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 47). இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட் தொழில் செய்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளது. இரண்டாவது மனைவி இவரை விட்டு சென்றதால் மூன்றாவது திருமணம் செய்துள்ளார் அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் காரணமாக சென்னையில் இருந்த போது அங்கே ஜீனத் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீனத்திற்கு பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தபோதிலும் பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளார். ஜீனத் அவருடைய கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பாரதியுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது குழந்தைகளுடன் ஜீனத்தின் 10 வயது மகள் மற்றும் மகன் ஆகியோர் நேற்று முன்தினம் காமராஜபுரம் பகுதியிலுள்ள வீட்டில் துங்கி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது தூங்கி கொண்டு இருந்த ஜீனத்தின் 10 வயது மகளை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தாய் ஜீனத்திடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீனத் வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின அப்பொழுது இதுபோன்று பல முறை சிறுமி என்றும் பாராமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஆபாச படங்கள் உள்ளவற்றையும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பாரதி வேறு ஏதேனும் சிறுமியிடம் இதுபோன்ற அத்துமீறல் ஈடுபட்டார் என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது

மேலும் பல சிறுமிகளிடம் தொந்தரவு செய்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story
ai solutions for small business