வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டு

வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டு
X
வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி சீறிப்பாய்ந்த காளைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் குறிப்பிட்டுள்ள இலக்கை வேகமாக ஓடி அடைந்து வெற்றி பெறும் காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள், ஆலங்காயம் வட்டார அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவகுழு வருவாய் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்