தொடர் செயின்பறிப்பு, வழிப்பறி- 2 பேர் கைது

தொடர் செயின்பறிப்பு, வழிப்பறி- 2 பேர் கைது
X

வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு, வழிப்பறி என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவர் கடந்த வாரம் நியூ டவுன் பகுதியில் இருந்து புதூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், லோகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் இரண்டு சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள், செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் தேடிவந்த இருவர் என்பதும் ஆம்பூர் பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (20), பிரவின் (19) என தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே அவர்கள் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 11 சவரன் தங்கநகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!