வாணியம்பாடியில் சமக., ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடியில் சமக., ஆலோசனை கூட்டம்
X

வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வேலூர் மண்டல சமக நிர்வாகிகள் மற்றும் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மண்டல பொறுப்பாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராதிகா சரத்குமார், என் கணவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் மசூதிகள், சர்ச்சுகள், மற்றும் கோவில்களில் பிரார்த்தனை நடத்திய பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சாதி, மதம் கடந்து பழகக்கூடியவர் அவர் என தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!