வாங்கிய பணத்தை தராத நண்பர்கள், விவசாயி தற்கொலை

வாங்கிய பணத்தை தராத நண்பர்கள், விவசாயி தற்கொலை
X

வாணியம்பாடி அருகே நண்பர்களுக்கு கடன் வாங்கி கொடுத்த ரூ. 7 லட்சம் பணத்தை திருப்பி தராததால் விரக்தியடைந்த விவசாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூரை சேர்ந்தவர் ராம்குமார் (35).கூலித்தொழிலாளி. இவர் மனைவி , மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு புத்துகோவில் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான சந்தோஷ்,மோகன் ,சரவணன் ஆகிய மூன்று பேரும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று வருவதாக கூறி ராம்குமாரிடம் பணம் கடனாக வாங்கி தருமாறு கேட்டுள்ளனர் .

நண்பர்கள் கேட்பதால் தன் தந்தை மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று அதற்கான ஓய்வு தொகை வந்ததையும் அதனுடன் சேர்த்து வேறு இடத்தில் கடன் வாங்கி மொத்தமாக ரூ. 7 லட்சம் பணத்தை நண்பர்களுக்கு ராம்குமார் கொடுத்துள்ளார். இந் நிலையில் ஐந்து ஆண்டுகள் கடந்தும் , பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாலும் ராம்குமார் வேறு இடத்தில் பெற்ற பணத்தை பணம் கொடுத்தவர்கள் கேட்டு வந்ததால் தொடர்ந்து நண்பர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை வாங்கிய நண்பர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இரு பக்கமும் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் நேற்றிரவு தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் தூங்கிய பின்னர் தன்னுடைய மரணத்திற்கு காரணம் தன்னிடம் பணம் பெற்ற தனது நண்பர்களான சந்தோஷ் , மோகன் ,சரவணன் ஆகியோர் தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தனி அறையில் சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவஇடம் சென்ற திம்மாம்பேட்டை காவல்துறையினர் எல்லை பிரச்சனையால் திரும்பி வந்து விட்ட நிலையில் 16 மணி நேரத்திற்குப் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மீண்டும் தமிழக எல்லை பகுதி என்பதால் தமிழக காவல்துறையினர் குப்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சடலத்தை அங்கிருந்து கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story