வாணியம்பாடி அருகே காலாவதியான குளிர்பானங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

வாணியம்பாடி அருகே காலாவதியான குளிர்பானங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
X

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள காலாவதியான குளிர்பானங்கள்

Expired soft drinks dumped on roadside in Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பெருமாள் கோயில் பின்புறத்தில் பாலாற்றின் கிளை ஆறு உள்ளது. இதன் அருகில் சாலையோரங்களில் காலாவதியான குளிர்பானங்கள் மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர் இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவர்கள் குளிர்பானங்களை எடுத்து அருந்துவதாக கூறப்படுகின்றது.

எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நீர்நிலைகளில் நகராட்சி நிர்வாகம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய்த் தொற்று பரவும் நிலை உருவாகியுள்ளது மேலும் சாலை ஓரங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான குளிர்பானங்களை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!