ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி.
திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சாமி சமேத வள்ளி, தெய்வானை கோவில் அமைந்துள்ளது.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இயற்கை எழில் மிகுந்த இக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜலகா ம்பாறை நீர்வீழ்ச்சிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் நேற்று நீர்வீழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
ஆம்பூரில் வேலை வாய்ப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 76 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, உமராபாத், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் கல்வி அடிப்படையில் அந்தந்த நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரன் பாண்டியன் பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி தனியார் நிறுவனங்களில் பணி புரிவது, சுயதொழில் செய்வது, அரசிடமிருந்து தொழில் செய்ய கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu