ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர்  தற்கொலை
X

ஆன்லைன் சூதாட்டத்தை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஆனந்தன் (வயது 30) என்பவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டம் தேர்தலுக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது வாக்கினை செலுத்தியுள்ளார் பின்பு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்து எங்களுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை பணத்தை என்ன செய்கிறாய் என அவருடைய பெற்றோர்கள் கேட்டுள்ளனர். அப்பொழுது பெற்றோரிடமும் மற்றும் அவருடைய உறவினர் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்துள்ளதை பெற்றோர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி கிராமிய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil