திருப்பத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார்

திருப்பத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார்
X

திருப்பத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார்

திருப்பத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர் காந்தி, இரண்டாம் அலைக்கு அதிமுக அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு கொரோனா நிவாரண நிதியாக 2வது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 3,13,692 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்

தமிழக அரசு அறிவித்துள்ள மூன்றாம் பாலினத்தவர்க்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 2000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 237 திருநங்கைகளுக்கு 2000 ரூபாய் வீதம் முதல் கட்டமாக 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டத்தை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் சமூக நலத்துறை சார்பில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

மேலும் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2020 மற்றும் 21ஆம் ஆண்டு நிதியின்படி நிலுவையில் உள்ள 298 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மேலும் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே மாவட்டத்தில் எப்போதுமே இருக்காது. தற்போது உள்ள முதல்வர் கொரோனா நோயாளிகளை பார்க்க கொரோனா தடுப்புக் கவசம் அணிந்து சென்று பார்த்ததை இந்தியா முழுவதும் பாராட்டி வருகின்றன. இந்தநிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றார்

கொரோனா இரண்டாம் தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணமே அதிமுக அரசு தான். தமிழகத்தில் தேர்தல் நடந்த பொழுது இதை கவனிக்காமல் இருந்ததால் அதிக அளவில் பரவியது என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story