திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X
திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 691 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பணி ஆணை உள்ளிட்ட 16 கோடி 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேலூர் எம்பி கதிர் ஆனந்த், திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை மற்றும் துணை ஆட்சியர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!