ஆண்டியப்பனூர்  நீர்தேக்கம் ஓடை பாசன வசதிக்காக திறப்பு

ஆண்டியப்பனூர்  நீர்தேக்கம் ஓடை பாசன வசதிக்காக திறப்பு
X

ஆண்டியப்பனூர்  நீர்தேக்கம் 

ஆண்டியபனூர்  நீர்தேக்கம் ஓடை அணையை பாசன வசதிக்காக 11 ஆண்டுக்கு பிறகு இன்று வேலூர் எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆண்டியப்பனூர் அணை. ஜவ்வாது மலை பகுதியில் இருந்தும் உற்பத்தியாகும் பெரியாறு மற்றும் கொட்டாறு ஆகிய இரு ஆறுகளில் இணைக்கும் ஆண்டியப்பனூர் கிராமத்தில் அணை கட்டுவதற்கு கடந்த 2001 ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 2007ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அணையானது கடந்த 14 ஆண்டுகளில் 9 முறை தண்ணீர் நிரம்பியுள்ளது.

ஆனால் ஒரு முறை கூட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்தநிலையில் தற்பொழுது விவசாயிகளின் பாசன வசதிக்கும் மற்றும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்கும் வினாடிக்கு 40 கன அடி தண்ணீரை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் வெளியேறும் தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

இதில் வெளியேறும் தண்ணீர் ஆனது நீர் கால்வாய்கள் மூலம் 2970 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் மற்றும் 9 ஏரிகளின் கீழ் 14 கிராமங்கள் பயன் பெறும் எனவும் அதன் கீழ் 2055 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!