பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் லேசான மழை மற்றும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார்.

மேலும் இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் பாலாற்றில் நீர் வரத்தும் சற்று அதிகரித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!