திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போலீசார் தடுத்து நிறுத்தம்

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போலீசார் தடுத்து நிறுத்தம்
X

கட்சியின் சுவர் விளம்பரத்தை பொதுப்பணித்துறையினர் அழிக்க வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 

கட்சியின் சுவர் விளம்பரத்தை பொதுப்பணித்துறையினர் அழிக்க வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா வருகிற ஆகஸ்டு 17 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்து உள்ளனர்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவ்வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்ல உள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவர் விளம்பரத்தை பொதுப்பணித்துறையினர் அழிக்க வந்துள்ளனர்.

இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்ததியதின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!