அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் மனு தாக்கல்

அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் மனு தாக்கல்
X

அம்பேத்கர் கருணாநிதி வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விசிக வேட்பாளர் 

திருப்பத்தூரில் அம்பேத்கர் மற்றும் கருணாநிதியின் வேடமணிந்தவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விசிக வேட்பாளர்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் கடைசி நாளான இன்று திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக திருப்பத்தூர் 3வது வார்டு பகுதிக்கு போட்டியிடும் செல்வி விஜயகுமார் மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

அப்போது கேரளா மேளம் தாளங்களுடன், அம்பேத்கர் மற்றும் முதல்வர் கருணாநிதி போல் வேடமணிந்த ஆட்களை அழைத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது...

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare