திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகின்றன
இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக்கொண்டு கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் தங்கப்பாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu