திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது

திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது
X

திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

திருப்பத்தூரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பத்தூர் மாவட்டம் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜ்குமார் (26) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குமாரின் மனைவியின் தங்கைக்கும் ராஜ்குமாருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர் எனவே இவர் 3 மாத கர்ப்பிணியாகியுள்ளார்.

இதனை அறிந்த பெண்ணின் தகப்பனார் கணேசன் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனை விசாரித்த போலீசார் ராஜ்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் கௌதம்பேட்டை டி.எம்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இதன் மனோஜ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
ai in future agriculture