திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என அமைச்சரிடம் புகார்
திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என நோயாளியின் மகன் அமைச்சரிடம் கதறி அழுத சம்பவத்தால் பெரும் பரபரப்பு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தார். அப்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பியபோது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட புதுப்பட்டு பகுதியை சேர்ந்த பவுன் என்பவர் தனது தந்தை காசி ராஜன் (வயது 42) என்பவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளதாகவும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை, மருத்துவமனையில் முறையான தண்ணீர் வசதி கூட இல்லை என கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மேலும், இதுதான் சுகாதாரத் துறையா? உடனடியாக என் தந்தையை மருத்துவமனையில் இருந்து அனுப்பி விடுங்கள். வேறு எங்காவது சிகிச்சைக்காக சேர்த்து உயிரைக் காப்பாற்றி கொள்கிறேன் என கூறி அழுத சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu