திருப்பத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
X

திருப்பத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், மற்றும் கொரோனா காலகட்டத்தில் டாஸ்மார்க் கடைகளை திறந்து உள்ளதை கண்டித்து மத்திய. மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறிக்க கூடாது, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, தற்பொழுது கொரோனா வைரஸ் நோய் தொற்று காலம் என்பதால் பொதுமக்கள் வேலையின்றி தவித்து வரும் வேளையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் தேமுதிக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!