திருப்பத்தூர் மாவட்டத்தில்  77.85  சதவீதம் வாக்குப்பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில்  77.85  சதவீதம் வாக்குப்பதிவு
X

வாக்குப்பதிவு (கோப்பு படம் )

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.85 சதவீதம் பதிவானது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.85 சதவீதம் பதிவானது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று ஆலங்காயம், மாதனூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்தது.

2 ஒன்றியங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 115 பேர் வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சற்று மந்த நிலையிலேயே இருந்து மாலை நேரத்தில் விறுவிறுப்பாக நடந்தன மாலை 6 மணி வரை நடந்தது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் 75 ஆயிரத்து 427 பேரும், அதாவது 79.46 சதவீதமும், மாதனூர் ஒன்றியத்தில் 94 ஆயிரத்து 365 பேரும் அதாவது 76.60 சதவீத வாக்குகள் பதிவானது 2 ஒன்றியங்களிலும் சேர்த்து 77.85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

2 ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil