திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல் நடைபெறு வருகின்றது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 171 வார்டுகளில் 347 வாக்குச் சாவடிகள் மற்றும் 110 வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் நாட்றம்பள்ளி உதயேந்திரம் ஆலங்காயம் ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளது இதில் 1,49,874 ஆண் வாக்காளர்கள், 1,61,394 பெண் வாக்காளர்கள் மொத்தம் 3,11,335 உள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 33 மற்றும் 88 வாக்குப்பதிவு மையத்திற்கு கூடுதல் போலீஸ் போடப்பட்டு 924 போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட உள்ளனர்.வாக்களிக்கும் வரக்கூடிய நபர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும் வாக்கு மையத்திற்கு அனுப்பப்படுகின்றன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu