திருப்பத்தூர்: வருடாந்திர வங்கி கடன் திட்ட அறிக்கை 2021-22

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருடாந்திர வங்கி கடன் திட்ட அறிக்கை 2021-22 ஆட்சியர் சிவனருள் வெளியிட்ட போது.
திருப்பத்தூர் மாவட்டம் வங்கிகளில் வழங்கப்படும் வருடாந்திர கடன் திட்ட அறிக்கை 2021- 22 மாவட்ட ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார் இதனை இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் ஆட்சியர் சிவனருள் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக கடன் வழங்க முன்வரவேண்டும் இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கடன் வழங்க முன்வர வேண்டும் முதன்மை மாவட்டமாக வங்கியாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் விவசாய கடன்னாக ரூபாய் 2663.89 கோடி சிறு, குறு தொழில் கடனாக ரூபாய் 500.72 கோடி இதர முன்னுரிமை கடனாக 1050.30 கோடி என மொத்தம் 4,214.91 கொடிகளை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 4,214.91 கோடிகளை குறித்த காலத்திற்குள் வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவனருள் தெரிவித்துள்ளார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி உதவி இயக்குனர் அருண், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்பாண்டியன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் சுமலதா, பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் மாமல்லன் ஆகியோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu