திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருப்பத்தூர் நகராட்சிகுட்பட்ட புதுப்பேட்டைரோடு இ அப்துல் மாலிக்தெரு மற்றும் பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் அமைத்துள்ள கழிவுநீர் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தங்குதடையின்றி வழங்க வேண்டும் எனவும் இப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏறப்டாமல் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் நகராட்சி பொறியாளருக்கு ஆணையிட்டார்
அதனை தொடர்ந்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.81.10 இலட்சம் மதிப்பீட்டில் கனமந்தூர் முதல் பெரியவெங்காயப்பள்ளி வரை 2 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் 2 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் கருப்பனூர் ஊராட்சியில் செல்லாகுட்டை ஏரி பகுதியில் ரூ.5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 நீரில் மூழ்கும் குட்டைகளையும் ரூ.84 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவலை தடுப்பணையையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மேலும் திருப்பத்தூர் மாவட்டம் மருதகேசரி மகளிர் ஜெயின் கல்லூரி அருகில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை 45 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறறு வரும் 2 வழி சாலையை 4 வழிசாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தும் தார்சாலை அமைக்கும் பணியை ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார் இப்பணியை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும் உதவி கோட்டபொறியாளருக்கு உத்தரவிட்டார்
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் முருகன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமேதகம், சித்ரகலா நகராட்சி பொறியாளர் உமாமகேஷ்வரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சீனிவாசன், பிரவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu