அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவி: காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான BiPAP என்ற உயிர்காக்கும் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பரிதாபமாக இறந்து போகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், தான் ஒரு மருத்துவர் என்பதால் ஆக்சிஜன் இல்லாமல் உயிரை காப்பாற்றும் கருவியை தனது சொந்த செலவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.
சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான BiPAP என்ற உயிர்காக்கும் கருவியை திருப்பத்தூர் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன், டாக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். மேலும், காவல்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித உதவிகள் தேவை என்றாலும் உடனடியாக அழையுங்கள் என்றும் மருத்துவர்களிடம் கூறினார்.
திருப்பத்தூர் டிஎஸ்பி பிரவீன் குமார், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, நகர காவல் ஆய்வாளர் பேபி ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu