திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
X

திருப்பத்தூர் கலெக்டர் தலைமையில் அரசு ஊழியர்கள் தேசிய வாக்காளர் தின உறுமிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷாவஹா தலைமையில் அனைத்து அரசு பணியாளர்களும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அமர் குஷாவஹா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் சிறப்பாக பனியற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு