திருப்பத்தூரில் ஆக்சிசன் பிளான்ட் அமைத்து தருவோம்: ஜெயின் சங்கங்கள் உறுதி
திருப்பத்தூர் ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் அளிக்கும் ஜெயின் சங்கத்தினர்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 100 LPM கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் பிளான்ட் அமைத்திட ஜெயின் சங்கங்கள் ஒன்றிணைந்து செய்து தருவதாக ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம்.. வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் உள்ளன இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நோய்த்தொற்றுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை உதவியாக செய்து வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பகுதியில் உள்ள ஜெயின் சங்கங்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சன் தேவையினை பூர்த்தி செய்திட 100 LPM கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் பிளான்ட் அமைத்து கொடுக்க அதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆட்சியர் சிவனருள் இடம் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu