திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் திடீரென கோடை மழை பெய்தது

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் திடீரென கோடை மழை பெய்தது
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் திடீரென கோடை மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது இந்த மழையானது சுமார் அரை மணிநேரம் நீடித்தது பலத்த காற்றும் வீசியது சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்..அதேபோல் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!