மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்
X

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 15 பேருக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது

இதில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினர்

அதனை தொடர்ந்து தமிழ்நாடு பவுண்டேஷன், வாசுவி அறக்கட்டளை இணைந்து மெரினா பதிப்பகம் சார்பில் 8 லட்சம் மதிப்பீட்டில் கொரோனா காலகட்டத்தில் பயன்பெறும் வகையில் ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர்.

இந்த நிகழ்வில் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!