திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு ஒரு ஜேசிபி, 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் அருகே உள்ள ராச்சமங்களம் ஏரியில் நள்ளிரவில் தொடர்ந்து மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தொடர்ந்து புகார் வந்திருந்தன.

அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவில் எஸ்பி தனிப்படை பிரிவு போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அனுமதி இன்றி மண் கடத்தி வந்த மூன்று பேரை எஸ்பி தனிப்படை போலீசார் நள்ளிரவில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, ஏரி பகுதியில் இருந்து திருப்பத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான வெங்களாபுரம் பகுதியில் விளைநிலங்களை ரியல் எஸ்டேட் மனைகள் விற்பனை செய்ய ஏரியில் இருந்து மண் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், அண்ணாமலை, மாரியப்பன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக மண் கடத்தியதாக திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர், மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஜேசிபி 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!