திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
X

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் திருட்டு.. கிராமிய போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷமங்கலம் ஊராட்சி காடையாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பு இவர் அதே பகுதியில் கவரிங் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அன்பு சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த அவர் இரு தினங்களுக்கு முன் சபரிமலைக்கு சென்றார் இதனால் அவரது மனைவி உமா நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கச் சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை வந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது

இதுகுறித்து உமா திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!