ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்
X

மாணவர்களின் கோரிக்கையை செவிமடுக்கும் கலெக்டர் அமர் குஷ்வாஹா 

பூங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

எனவே 190 மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி கற்றுத்தர முடியவில்லை என கூறியும் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவண செய்ய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் பள்ளிக்குச் சென்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்