திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

X
By - Venkateswaran, Reporter |12 Nov 2021 9:45 AM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, மாவட்டத்தில் ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும், இன்று விடுமுறை எனவும்; ஆறாம் வகுப்பு முதல், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய, அனைத்து கல்லூரியும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu