நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறுகையில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிகளிலும் மற்றும் உதயேந்திரம், ஆலங்காயம், நாட்றம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாலை வசதி, திடக் ழிவுமேலாண்மை திட்டம், கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களை தூய்மைபடுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களிடமிருந்து வீடு வீடாக சென்று குப்பைகளை 100 சதவிகிதம் பெறப்பட வேண்டும். நகராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்..
மேலும் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர்கால்வாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவைகளை தூய்மையாக வைத்தகொள்ள வேண்டும். அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாதவாறு கண்காணித்துக்கொள்ள வேண்டும். மேலும் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட பகுதிகளிலுள்ள பழைமையான கட்டடங்கள், திருமண மண்டபங்கள், விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும்.
அதேபோல் நூலகங்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும். மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டு மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்குட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் நன்றாக உள்ளதா என ஆய்வு செய்து வாககுச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவைபடுமாயின் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும். மேலும் எத்தனை இடங்களில் 2 வார்டுகள் உள்ளது எனக்கண்டறிந்து உடனடியாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் குபேந்திரன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) இராஜேந்திரன், தனபாண்டியன், உதவி செயற்பொறியாளர் அம்சா, நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சேகர், கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu