திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள்: கலெக்டர் ஆய்வு கூட்டம்
திருப்பத்தூரில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள்-2021 அறிவிக்கப்பட்டுள்ளதால், அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வாரடு உறுப்பினர்களுக்கும், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 208 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், 1779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் முதல் கட்ட வாக்குப்பதிவு ஜோலாயார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 83 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 137 கிராம ஊராட்சி தலைவர், 1188 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கும் 06.10.2021 தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 42 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 71 கிராம ஊராட்சி தலைவர், 591 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 09.10.2021 தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரகள் வைக்கும் அறை மற்றும் வாக்குகள் எண்ணிக்கை, தேர்தல் குறித்த பயிற்சிகள், தேர்தலுக்கான வாக்கு செலுத்தும் சீட்டுகள், தபால் வாக்கு சீட்டுகள், தேர்தல் பார்வையாளர், தேர்தல் செலவினங்கள், போக்குவரத்து வசதி, செய்திகள் மற்றும் தகவல் பரிமாறற்ம், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கொரோனா முன் தடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிவது மற்றும் கிருமிநாசினி, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா முன்தடுப்பு பணிகளை அவசியம் பின்பற்றி இத்தேர்தலை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஹரிஹரன், துணை இயககுநர் சுகாதாரப்பணிகள் செந்தில், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu