திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி திறப்பு குறித்த ஆய்வுக்  கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி திறப்பு குறித்த ஆய்வுக்  கூட்டம்
X

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பள்ளிகள் திறப்பதற்கான ஆய்வு கூட்டம் .

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஆய்வுக்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதற்கான கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture