திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த  ஆய்வு கூட்டம் 
X

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைக் கணக்கெடுப்பு ஊரகம்-2021 மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மறறும் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 646 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை வடகிழக்கு பருவமழை காலங்களுக்கு முன்பாக விரைந்து முடிகக்ப்பட வேண்டும். 100 வேலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை துரிதபடுத்த வேண்டும்.

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் வழங்கப்பட்ட வீடுகள் கட்டும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பழுதான சாலைகளை மேம்படத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைக் கணக்கெடுப்பு ஊரகம்-2021 பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்

பின்னர் இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைக் கணக்கெடுப்பு ஊரகம்-2021 குறித்து துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர் தணிக்கை பிச்சாண்டி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுந்தரபாணடியன், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், இராஜேந்திரன், பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil