பதவிக்காக மட்டுமே அதிமுகவை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்: கே.சி.வீரமணி பேச்சு.

பதவிக்காக மட்டுமே அதிமுகவை விட்டு பிரிந்து   சென்றுள்ளனர்: கே.சி.வீரமணி பேச்சு.
X

திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி தலைமையில் நடைபெற்றது

அதிமுகவை விட்டு சென்றவர்கள் பதவிக்காக மட்டுமே சென்றுள்ளனர் என திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, பதவிக்காக மட்டுமே இப்போது அதிமுகவை விட்டு சென்றுள்ளனர். அதிமுக கட்சியின் கொள்கை மற்றும் தலைவர், அம்மா எப்போதும் அவர்களது நெஞ்சில் நிலைத்து இருக்கும். தமிழகத்தில் மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் வெற்றி பெறாது. ஆனால் அதிமுக தனித்து நின்றால் அமோக வெற்றிப்பெறும். மேலும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று இழந்ததை மீண்டும் பெறுவோம் என கூறினார்.

இக்கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai based agriculture in india