திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த  4 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

 கடத்த பயன்படுத்தப்பட்ட மினிவேன் மற்றும்  4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர் தப்பி ஓட்டம்

திருப்பத்தூர் அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டில் வெளிமாநிலத்திற்கு மினி வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்து சென்று போது மினி வேனில் வெளி மாநிலத்திற்கு கடத்த தயார் நிலையில் இருந்த 3 டன் ரேசன் அரிசியை கைப்பற்றினர்.

மேலும் மோகன் என்பவரின் வீட்டின் பூட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் உடைத்து சோதனை செய்ததில் மேலும் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து 4 டன் ரேசன் அரிசி, கடத்த பயன்படுத்தப்பட்ட மினிவேன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தார். அப்போது திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் பறக்கும் படை வட்டாட்டசியர் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் ரேசன் அரசி கடத்த முயன்று தப்பி ஓடிய நபர்களை ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!