அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல்

அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல்
X

ஊராட்சி தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் 

திருப்பத்தூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி கருணாநிதி. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி நிர்வாகத்தில் தலையிடுவது இல்லை அவருடைய கணவர் கருணாநிதிதான் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு மேலும் ஐந்து நபர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிகாரம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

மேலும், கால்வாய், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தங்கள் பகுதிக்கு செய்யாமல் நிராகரிக்கிறார்கள் என்று கூறி சுந்தரம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் - தருமபுரி முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து டிஎஸ்பி சாந்தலிங்கம் பொதுமக்களிடம் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை இருப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!