திருப்பத்தூரில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பத்தூரில் இன்று  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 262 மனுக்கள் பெறப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் கடந்த 5 மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை இன்று முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் 262 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கை மீது நல்ல தீர்வு காணவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு பிறப்பித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!