திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
X

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.

தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியதாகவும், அவர்களுக்கு தற்பொழுது வழங்கிவரும் தினக்கூலியாக 280 ரூபாயை 450 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஊதிய உயர்வு வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!