திருப்பத்தூரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
பாதிரியார் பொன்னையாவை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி அருமனை கிறிஸ்தவ இயக்கம் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த 18 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் அருமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதிரியார் ஜாா்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் இந்து மதத்தையும் , பாரத பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் அவதூறாக பேசினார். இதுகுறித்து தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பாஜகவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வாசுதேவன் பொறுப்பாளர் வெங்கடேசன் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu