திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் கருவிகளை வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்
X

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை மூலமாக ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 5.5 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை தனியார் தொண்டு நிறுவனம் வழங்கியது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக தீவிரமடைந்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தேவைகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மூலமாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கலெக்டர் சிவனருள், உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்